மீ டூ எனக்கும் தான்.! நடிகர் விமல்

Print lankayarl.com in
#

விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விமல் -ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.

காதல் – நகைச்சுவை படமான இதனை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தையே மிஞ்சும் அளவுக்கு அடல்ட் காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த டிரெய்லரை தொடங்கும் போது நடிகர் விமல் மீ டூ புகார் ஒன்றை கூறுகிறார்.

அதில் “நானும் சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன் அந்த காஞ்சனா என்ன காட்டு பங்களாவுக்கு கூட்டிட்டு போய் என்ன பாடுபடுத்தினா தெரியுமா.! உங்களுக்கு மட்டும் தான் மீ டூவா… எனக்கும் தான் மீ டூ என விமல் கேட்டதும் டீசர் தொடங்குகிறது.

வார்னிங் அடல்ட் கன்டென்ட் என்ற எச்சரிக்கையுடன் தொடங்கும் அந்த டீசர் வீடியோவில் எல்லாமே செம கலாய் தான்.

உன்ன மாதிரி ப்ளூ சட்ட போட்டவங்க சொல்றத எல்லாம் நம்ப மாட்டேன், நீயும் உங்க அக்காவும் போடுறதையே வேலையா வெச்சிட்டு இருக்கீங்க, பொம்பள அவ்ளோ பெருசா காட்டுறா ஆம்மளைங்க நீங்க இத்தனுன்டு காட்டுறீங்க’

ஸ்ரீரெட்டி வேண்டாம்னே அவ பேட்டி குடுத்துடுவா’ இப்படி பல கலாய் வசனங்கள் இருக்கின்றன.

சமீபகாலமாக அடல்ட் காமெடி படங்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்கள் பெற்ற போதும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

எனவே அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் அதே ஜானரில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்தவரிசையில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படமும் சேர்ந்துள்ளது.