ஸ்ருதியின் பாலியல் புகார் குறித்து அர்ஜுன் விளக்கம்

Print lankayarl.com in தீவகம்

ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாரை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். அருண் வைத்தியநாதன் இயக்கிய நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன்.

படப்பிடிப்பின்போது அர்ஜுன் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக ஸ்ருதி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ள புகார் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் மீது கூறப்பட்ட புகார்கள் அர்த்தமற்றவை. நான் இந்த துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். நான் எப்படிப்பட்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். நான் யாருடனும் படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டது இல்லை

தன் மீது பொய் புகார் தெரிவித்துள்ள ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர அர்ஜுன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் 50 பேருக்கு முன்பு அர்ஜுன் தனது பின் புறத்தை தொட்டு, தடவியதாக ஸ்ருதி புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதியின் புகார் குறித்து நிபுணன் பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு அர்ஜுன் மற்றும் ஸ்ருதி நல்ல பழக்கம். ஸ்ருதியின் புகாரை அறிந்து வேதனை அடைந்தேன். ஸ்ருதி புகார் தெரிவித்த அந்த காட்சியை மிகவும் நெருக்கமாக எடுக்க நினைத்தோம். ஆனால் இரண்டு மகள்களுக்கு அப்பாவான தன்னால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க முடியாது என்றார் அர்ஜுன். அதன் பிறகே அதை மாற்றினோம் என்றார் அருண்.

மீ டூ இயக்கம் சினிமா துறையில் சூடுபிடித்துள்ளது. பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் நடிகைகள் பிரபல நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் பல பிரபலங்கள் இந்த புகாரில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.