எல்லைதாண்டி மீன்பிடிப்பு:தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

Print lankayarl.com in தீவகம்

இன்று நெடுந்தீவுக்கு வட கிழக்கே எல்லைதாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களோடு சேர்த்து இரண்டு விசைபடகுகளையும் கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

விசாரனைக்கு பின்னர் மீனவர்கள் 9 பேரை யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.